1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 27 ஏப்ரல் 2018 (19:20 IST)

திறமை இருந்தால் அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை: அடா சர்மா

நடிகைகளுக்கு திறமை இருந்தால் யாருக்கும் அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை என்று நடிகை அடா சர்மா தெரிவித்து உள்ளார்.
 
பட வாய்ப்புக்களுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் சர்ச்சை குறித்து ’சார்லி சாப்ளின் 2’ படத்தின் நடிகை அடா சர்மா கூறியிருப்பதாவது:-

பெண்களை படுக்கைக்கு அழைப்பது எல்லா துறைகளிலும் இருக்கிறது. ஆனால் சினிமா துறையில் அதை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கிறார்கள். பாலியல் தொல்லைகள் என்பது முதலில் வீட்டில் இருக்கும் உறவினர்களிடம் இருந்து தொடங்குகிறது. 
 
கீழ்தரமான எண்ணம் உள்ளவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைக்கத்தான் செய்வார்கள். அதற்கு அந்த பெண் உடன்படாவிட்டாள் அவளிடம் யாராலும் நெருங்க முடியாது. என்னை யாரும் படுக்கைக்கு அழைத்ததில்லை. எந்த நடிகையானாலும் திறமை இருந்தால் யாருக்கும் அட்ஜஸ்ட் செய்யத் தேவையில்லை.