என்ஞாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடிய நடிகை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் பகல் நிலவு. இத்தொடரில் உண்மையான காதலர்களான அன்வர் மற்றும் சமீரா இருவரும் இணைந்து நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது.
சமீரா, ரெக்கை கட்டிக் பறக்குது உள்ளிட்ட நாடகங்களிலும் நடித்துள்ளார். அதனால் அவருக்கு பரவலாக ரசிகர்கள் உள்ளனர்.
கடந்தாண்டு அவருக்கு அன்வருடன் திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் அவர் கர்ப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், தெருக்குரல் அறிவு, தீ ஆகீர் குரலில் பாடி வெளியான என் ஜாய் எஞ்சாமி பாடலுக்கு சமீரா நடனமாடி ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். இது வைரலாகி வருகிறது.