1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜூலை 2020 (19:46 IST)

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியா? பெரும் பரபரப்பு

நடிகை விஜயலட்சுமி தற்கொலை முயற்சியா?
விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. மேலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை விஜயலட்சுமி, சீமான் குறித்து சமூக வலைத்தளத்தில் வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இதனை அடுத்து தற்போது இன்று அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் தற்கொலை செய்யப் போவதாகவும் தன்னுடைய மரணத்திற்கு பின்பு யாரும் சீமானை விட்டுவிட வேண்டாம் என்றும் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்
 
தன்னை சீமானும் அவரைச் சேர்ந்த கட்சியினரும் மிகுந்த டார்ச்சர் செய்வதாகவும் இந்த டார்ச்சரை தன்னால் சமாளிக்க முடியவில்லை என்றும் அதனால் தற்கொலை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் தற்கொலைக்கு முயன்ற நடிகை விஜயலட்சுமி, அடையாறு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழ் நடிகை ஒருவர் திடீரென தற்கொலை செய்ய முயற்சிப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது