வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (12:26 IST)

என் திருமணம் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் : பத்திரிக்கைகளை எச்சரித்த வரலட்சுமி

என் திருமணம் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் : நடிகை வரலட்சுமி கோபம்

தன்னுடைய திருமணம் தற்போதைக்கு இல்லை என்று நடிகை வரலட்சுமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
நடிகை வரலட்சுமிக்கும், நடிகர் விஷாலுக்கும் இடையே காதல் இருந்து வருவாதாக கிசுகிசுக்கப்பட்டது. 
 
இதை விஷாலும் சமீபத்தில் உறுதி செய்தார்.  சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “வரலட்சுமியும் நானும் சிறிய வயதிலிருந்தே நண்பர்கள். நடிகர் சங்கக் கட்டடத்தில் முதல் முகூர்த்தம் என் திருமணம்தான். 2018-ம் ஆண்டு ஜனவரி 14, என் திருமணம். இப்போதே கார்த்தியிடம் சொல்லி பதிவு செய்துவிட்டேன்’ என்று கூறியிருந்தார்.
 
இந்நிலையில் வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில்  “ஊடக நண்பர்களே.. நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. தற்போதைக்கு என்னுடைய வேலையையே திருமணம் செய்துள்ளேன். எனவே என் திருமணம் பற்றி பேசுவதை நிறுத்துங்கள். இது கீழ்த்தரமானது” என்று குறிப்பிட்டுள்ளார்.