என்ன விலை அழகே....? ஸ்லீவ்லெஸ் சேலையில் கொத்தி இழுக்கும் குந்தவை தேவி!
எவர் க்ரீன் நடிகையான திரிஷா 25 ஆண்டுகளாக அதே அழகோடு தனக்கான இடத்தை தக்கவைத்து வருகிறார். சினிமாவை பொறுத்தவரை நாயகிகளின் காலம் என்று பார்த்தால் 5 முதல் 10 ஆண்டுகள்தான். அதன் பிறகு அக்கா, அம்மா வேடத்தைக் கொடுத்துவிடுவார்கள். ஆனால் ஒரு சிலர்தான் இதற்கு விதிவிலக்காக இருப்பார்கள்.
அதில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் நடிகை திரிஷா. சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்து இப்போதும் பரபரப்பான கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் கடந்த சில ஆண்டுகளாக பெரியளவில் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் இப்போது பொன்னியின் செல்வன் வெற்றியால் மீண்டும் அவரைத் தேடி வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. இப்படம் நாளை வெளியாகவுள்ளது
இந்நிலையில் தற்போது ப்ரோமோஷனில் ஸ்லீவ்லெஸ் சேலையில் கார்ஜியஸ் அழகில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார்.