வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (22:34 IST)

ஷாலினி அஜித் இடத்தை பிடிப்பேன்: நடிகை ஸ்வாதிஷ்டா அதிரடி

மிஷ்கின் நடித்த சவரக்கத்தி படத்தில் நடித்த நடிகை ஸ்வாதிஷ்டா, தற்போது ஜீவா நடித்து வரும் 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஸ்வாதிஷ்டா கூறுகையில், 'சவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள பல நினைவுகள் இருக்கின்றன. என்னைப் போல ஒரு புதுமுகத்துக்கு மிகப்பெரும் இயக்குனர்களான மிஷ்கின் சார், ராம் சார் ஆகியோரை படப்பிடிப்பில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். ஆனால் எனக்கு சவரக்கத்தியில் நானும் நடிக்கிறேன் என்ற மேலான, உயர்ந்த உணர்வு தான் இருந்தது. மிஷ்கின் சார் படப்பிடிப்பில் அனைவரையும் சமமாக நடத்துவார், அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு பொருந்தியவர். எதிர்காலத்தில் அவரின் நிறைய படங்களில் நடிக்க ஆசை. ராம் சாருடன் எனக்கு பெரிய உரையாடல்கள் இல்லையென்றாலும் அவருடைய நடிப்பால் நான் கவரப்பட்டேன், குறிப்பாக கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது” என சந்தோஷமாக சொல்லும் ஸ்வாதிஷ்டா ‘மதம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது: அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் அழகு, திறமை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் நான் வியந்து பார்க்கிறேன். நான் பிரமித்து பார்க்கும், அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை ஷாலினி அஜித்குமார். அவரின் வேலையை பற்றி குறிப்பிட ஒரு இணையான சொல் கிளாசிக் தான். இளம் வயதிலேயே சிவாஜி சார், ரஜினி சார் ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரன், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு. மேலும், மணிரத்னம் சார் அலைபாயுதே 2 படத்தை எடுப்பார், அதில் என்னை நாயகியாக நடிக்க வைப்பார், அப்போது நான் ஷாலினியின் கேரக்டரில் அவரை விட சிறப்பாக நடிக்க முயற்சி செய்வேன்' என்று கூறினார்