"ஹாய் ஆண்டி" ஆளாளுக்கு கலாய்க்கும் ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் புகைப்படம்!

Last Modified வியாழன், 11 ஜூலை 2019 (19:05 IST)
உலக நாயகன் கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருந்தும் , தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர்தான் ஸ்ருதி ஹாசன். கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருப்பவர் ஸ்ருதி ஹாசன்.


 
தமிழில் விஜய், அஜித், சூர்யா என உச்ச நடிகர்களுடன் ஒரு ரௌண்டு வந்த நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு சிறிது காலம் கழித்து அம்மணிக்கு பட வாய்ப்பு குறைய ரியாலிட்டி ஷோ தொகுப்பாளராக மாறினார். இருந்தும், படவாய்ப்புகள் ஏதுமின்றி வந்த ஸ்ருதிஹாசன் இதற்கிடையில் காதல் வலையில் விழ சில காலம் ஜாலியாக உலா வந்துகொண்டிருந்தார். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமீபத்தில் திடீரென தங்கள் காதல் முறிந்துவிட்டதாக சமூகவலைத்தளங்களில் தெரிவித்து ஷாக் கொடுத்தார். 


 
காதல் முறிவுக்கு பின்னர் கேரியரில் அதீத கவனத்தை செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன்  சமீபநாட்களாக கவர்ச்சியான போட்டோஷூட்களை நடத்தி படவாய்ப்பிற்கு வழிதேடி வருகிறார். அந்தவகையில் தற்போது சமீபத்தில் கலந்துக்கொண்ட ஒரு பேஷன் ஷோ ஒன்றில் இவரின் உடல் எடை அதிகரித்து ஆளே அடையாளமின்றி மாறிவிட்டார் . இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :