ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 30 மார்ச் 2020 (16:45 IST)

உன் பஞ்சாபி புருஷன் உன்ன நல்லா பார்த்துப்பான் - அமலா பால் குறித்து ஸ்ரீ ரெட்டி பதிவு!

தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அமலாபால். இவர் மைனா, தலைவா, ஆடை உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கிரீடம், தெய்வத்திருமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கடந்த 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்கை திடீரென திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆனா விஷயத்தை அமலா பால் ரகசியமாக வைத்திருக்க நினைந்தார். அதற்குள் பவ்னிந்தர் சிங் இன்ஸ்டாகிராமில் திருமணம் ஆன புகைப்படங்களை பதிவிட்ட ட்ரெண்ட் ஆனது. இதனால் பவ்னிந்தர் மீது கோபமடைந்த அமலா பால் அவரை பின் தொடர்வதையே நிறுத்தி விட்டார். இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.


இந்நிலையில் தற்போது இது குறித்து பிரபல சர்ச்சை நடிகர் ஸ்ரீ ரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் கவலைப்படாதே அமலாபால் உன்னுடைய பஞ்சாபி கணவர் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார் நான் பஞ்சாபிகளை நம்புகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார். ஸ்ரீ ரெட்டி குதர்க்கமாக பதிவிட்டிருக்கும் இந்த சர்ச்சை பதிவு பலரையும் யோசிக்க வைத்துள்ளது.