வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (10:58 IST)

மாகாபா , பிரியங்காவின் நடவடிக்கையை எச்சரித்த நடிகை ஸ்ரீபிரியா!

சமீபநாட்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமூக சீர்கேடாக உள்ளது என்று கூறி பல்வேறு சமூக சீர்திருத்தவாதிகள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். 


 
அந்தவகையில் தற்போது அடுத்ததாக, அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களான மாகாபா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா இருவரும் சேர்ந்து அடுத்தவர்களின் உருவத்தை கேலி செய்து வருகின்றனர் என கூறி நடிகை ஸ்ரீபிரியா கண்டனங்களை தெரிவித்துள்ளார். 
 
இது குறித்து தனது ட்விட்டர்  கூறியுள்ளதாவது, நேரம் கிடைக்கும் சமையங்களில் நான் அதிகம் பார்ப்பது  விஜய் டிவி தான். அதில் பெரும்பாலும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது மிகவும் வருத்தமாக உள்ளது. ஒருவரை கேலி செய்து  காமெடி செய்வது எவ்வளவு கேவலம் தயவுசெய்து இதை மாற்றிக்கொள்வார்களா? விஜய் டிவி சூப்பர் சிங்கரில் ஒருவரின் மூக்கை கேலி செய்வதும், மற்றவர்களின் எடையை கேலி செய்வதும் சரியில்லை. 


 
மாகாபா , ப்ரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை, உங்கள் ஸ்டைலில் இது தான் காமெடி என்றல் நீங்ககள் ஒருவரை  ஒருவர் மாற்றி மாற்றி கேலி செய்துகொள்ளுங்கள்.  அதைவிட்டுவிட்டு மற்றவரை கேலி செய்து அசிங்க படுத்த உங்களுக்கு யார் உரிமை கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம்  என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும். மேலும் நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகியுள்ளேன். இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன். உங்கள் எதிர்ப்பை தெரிவியுங்கள்! என்று கூறி கடுமையாக கண்டித்துள்ளார்.