வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 25 மே 2023 (17:45 IST)

தயாரிப்பாளரின் மகனை மறுமணம் செய்துக்கொண்டாரா சமந்தா? வெளியான அதிர்ச்சி தகவல்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக ஒரு பெரிய ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளார். காரணம் நாக சைதன்யாவை விவகாரத்து செய்ததில் இருந்து அவரால் பெரிதாக வெற்றிப்படங்களை கொடுக்கமுடியவில்லை. 
 
இதனால் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சமந்தா இடையே மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்தும் கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறினார். இருந்தாலும் அவரால் ஹிட் கொடுக்க முடியவில்லை. 
 
இந்நிலையில் டிவிவி தனய்யாவின் மகனை சமந்தா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்று தகவல்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல். என்ன நடந்தது என்றால், டிவிவி தனய்யாவின் மகன் திருமணம் செய்து கொண்ட பெண்ணின் பெயர் சமந்தா அதனை நடிகை சமந்தா என தவறுதலாக சிலர் தகவல் வெளியிட்டு வதந்தியை கிளம்பிவிட்டனர்.