1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (14:44 IST)

விண்டேஜ் ஸ்டைலில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் மாடலுமான ரைசா வில்சன் அடுத்தடுத்து படங்களில் நடித்து பிரபல நடிகையானார். அவர் நடித்த பியார் பிரேமா காதல் திரைப்படம் இளைஞர்களை பெரியளவில் கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்களின் எண்ணிக்கை குறைந்தது. இதனால் அவர் இன்ஸ்டாகிராம் மூலமாக புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை எதிர்நோக்கினார்.

கடந்த ஆண்டில் பேஷியல் செய்த போது திடீரென அவரது முகம் வீங்கியது. இதனை அடுத்து தவறான சிகிச்சையால் தான் இந்த நிலை தனக்கு ஏற்பட்டதாகவும், தனக்கு பேஸியல் செய்த மருத்துவர் பைரவி தனக்கு நஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு பதில் அந்த மருத்துவரும் ரைசா மேல் மான நஷ்ட வழக்கு பதிவு செய்திருந்தார். ஆனால் அதன் பின்னர் அந்த பிரச்சனை அப்படியே விடப்பட்டது.

இப்போது ரைசாவின் கைவசம் சொல்லிக்கொள்ளும் படி பெரிதாக படங்கள் எதுவும் இல்லை. இந்நிலையில் மீண்டும் வாய்ப்புகளுக்காக கிளாமர் ரூட்டில் செல்ல ஆரம்பித்துள்ளார். அந்த வகையில் இப்போது அழகான சேலையணிந்து விண்டேஜ் ஸ்டைலில் எடுத்துக்கொண்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raiza (@raizawilson)