திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 26 அக்டோபர் 2020 (07:58 IST)

போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு நடிகை கைது!
கடந்த சில மாதங்களாக திரையுலகில் போதை பொருள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போதை பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி நடவடிக்கை எடுத்ததில் இதுவரை ரியோசக்கரவர்த்தி, ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய நடிகைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
மேலும் ஒரு சில நடிகைகளிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்பதும் அவர்களும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
பிரபல தொலைக்காட்சி நடிகை ப்ரீத்திகா சவுகான் என்பவரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகை ப்ரீத்திகா சவுகான் போதை பொருள் வாங்க முயற்சித்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு எதிராக கிடைத்த ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அடுத்த கைது யார் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது