புதன், 5 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2025 (08:49 IST)

பூஜா ஹெக்டேவின் முத்தக் காட்சிக்கு சென்சார் அதிகாரிகள் ஆட்சேபம்…!

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் பூஜா ஹெக்டேவை முன்னணி நடிகையாக்கியது தெலுங்கு சினிமாதான். அங்கு அடுத்தடுத்து முன்னணி நடிகர்களோடு வெற்றிப் படங்களைக் கொடுத்தார் பூஜா. தமிழில் ஒரு பெரிய பிரேக்குக்காக பல ஆண்டுகள் காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியது.

ஆனால் தமிழில் அதிக படங்களில் நடிக்காமல் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் அவர் கைவசம் சூர்யாவின் ‘மெட்ரோ’ மற்றும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ ஆகிய படங்கள் மட்டுமே உள்ளன.

இந்நிலையில் இந்தியில் அவர் ஷாகித் கபூருடன் இணைந்து ‘தேவா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் அதிகாரிகள் அதில் இடம்பெற்றிருந்த நெருக்கமான முத்தக் காட்சிகள் மற்றும் சில ஆபாச வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீக்க சொல்லியுள்ளனர். படக்குழுவினர் அதற்கு ஒத்துக்கொண்ட நிலையில் சென்சார் அதிகாரிகள் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.