வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (10:18 IST)

பச்சை சேலையில் கார்ஜியஸ் போட்டோஷூட் நடத்திய பூஜா ஹெக்டே!

தமிழில் முகமூடி படத்திலேயே அறிமுகமாகி இருந்தாலும் ஒரு பெரிய பிரேக்குக்காக காத்திருந்தார் பூஜா ஹெக்டே. அந்த வாய்ப்பு இப்போது பீஸ்ட் படத்தின் மூலம் நிறைவேறியுள்ளது. இந்த படத்துக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் தெலுங்கு மற்றும்  இந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சல்மான் கானுடன் ’கிசி கா பாய் கிசி கா ஜான்’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் பெரியளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை.

இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளியிட்டு வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. இப்போது அவர்  பச்சை நிற சேலையுடுத்தி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.