செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (14:16 IST)

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை

பூ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பார்வதி மேனன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
 
கேரளாவைச் சேர்ந்த பார்வதி, தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானவர். சென்னையில் ஒருநாள், உத்தம வில்லன், மரியான் ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான டேக் ஆப் படத்தில் சிறப்பாக நடித்தற்காக பார்வதிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
நேற்றிரவு நடிகை பார்வதி காரில் ஆலப்புழா அருகே மொம்புடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் கார் மீது இன்னொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயங்கள் எதுவும் இல்லாமல் அவர் தப்பித்தார்.