நடிகையின் குளியல் காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டல்: போலீசில் புகார்

Last Modified வியாழன், 20 ஜூன் 2019 (20:53 IST)
தொலைக்காட்சி சீரியல் நடிகையும், திரைப்படங்களில் துணை நடிகையுமாக இருந்து வரும் நிலானியின் குளியல் காட்சி வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது
இந்த புகாரில், 'வெளிநாட்டில் மென்பொறியாளராகப் பணிபுரியும் மஞ்சுநாத் என்பவர், தனது காதலன் தீக்குளித்து தற்கொலை செய்த பின்னர் தனக்கு ஆதரவுக் கரம் நீட்டியதாகவும், தன்னை திருமணம் செய்ய அவர் ஆசைப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மஞ்சுநாத்துக்கு ஏற்கனவே திருமணமான விவரம் தனக்கு தெரிய வந்ததால் அவரை விட்டு விலகியதாகவும் இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுநாத், தன்னை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்ததாகவும், தன்னை ரகசிய திருமணம் செய்ய மறுத்தால், தன்னிடம் உள்ள ஆபாச வீடியோ மற்றும் குளியலறை வீடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் வெளியிடப் போவதாக மஞ்சுநாத் மிரடியதாகவும் நிலானி தனது புகாரில் தெரிவித்துள்ளார். நிலானியின் இந்த புகார் மீது காவல்துறையினர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை நிலானியை காந்தி என்பவர் காதலித்து வந்தார் என்பதும் இருவரும் படுக்கையறையில் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் பின்னர் திடீரென காந்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :