செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (08:27 IST)

கணவர் மீது ஏறி அமர்ந்து குறும்பு பண்ணும் நமீதா - கேட்டால் Romance'ஆம்!

நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.

இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார். பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில், "நம் முதல் சந்திப்பின் தின வாழ்த்துக்கள் கணவரே... இந்த சந்திப்பு 4 வருடங்கள் ஆகிவிட்டது. இதே போன்று இன்னும் 40 வருடங்களுக்கு இருக்கவேண்டும். என கூறி அவர்மீது ஏறி அமர்ந்திருக்கும் அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு நடிகை குஷ்பு "மச்சக்காரன் உங்க மச்சான்" என கூறி கிண்டலடித்துள்ளார்.