திடீரென இன்ஸ்டாகிராமில் அனைத்து புகைப்படங்களையும் நீக்கிய மஞ்சிமா மோகன்!
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்வு நடிப்பில் வெளியான "அச்சம் என்பது மடமையடா" என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். பப்ளியான தோற்றத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதையடுத்து நடிகர் உதயநிதி நடிப்பில் வெளியான "இப்படை வெல்லும்" சத்ரியன், தேவராட்டம் என ஒரு சில படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.
ஆனால் அவரால் உச்ச நடிகையாக வரமுடியவில்லை. இரண்டாம் கட்ட ஹீரோக்களுடனே ஜோடி போட்டு வருகிறார். சமீபத்தில் அவர் நடிகர் கௌதம் கார்த்திக்குடன் காதலில் இருப்பதை அறிவித்தார். மேலும் அவர்களின் திருமணம் வரும் 28 ஆம் தேதி சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மஞ்சிமா தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் பதிவுகள் அனைத்தையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளார். இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.