புதன், 19 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (17:12 IST)

ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு கொலை… மாளவிகா மோகனன் சாட்டையடி கேள்வி!

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஒரு 19 வயது பெண் சில சமூகவிரோதிகளால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது சம்மந்தமாக நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்த நிலையில் அந்த பெண்ணின் உடலில் அதற்கான தடயங்கள் இல்லை என சொல்லி உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீஸாரே தீவைத்து எரித்தனர். இது குற்றவாளிகளை போலிசார் காக்கும் நோக்கில் உள்ளதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அனைத்துத் துறை பிரபலங்களும் குரல் கொடுக்க நடிகை மாளவிகா மோகனும் தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் ‘முன்பெல்லாம் வன்புணர்வு செய்பவர்கள்தான் பாதிக்கப்பட்டவர்களின் உடலை எரித்து தடயம் இல்லாமல் செய்வர். இப்போது ? நாம் புது இந்தியாவில் இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.