1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (22:42 IST)

கஸ்தூரி கூட ரஜினியை கலாய்க்கிற நிலைமை வந்துடுச்சே: ரஜினி ரசிகர்கள் வேதனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியலில் குதிப்பேன் என்ற வகையில் கடந்த சில நாட்களாக மறைமுகமாக பேசி வந்தாலும் கடந்த இருபது வருடங்களாக பேசி வருவதை போல இந்த முறையும் இருந்துவிடுமோ என்ற சந்தேகம் சில ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.



 


அரசியலுக்கு வருவேன் என்றும் அல்லது வரமாட்டேன் என்றும் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக ரஜினி ஏன் சொல்ல மாட்டேன் என்கிறார் என்பதே பலரது ரஜினி ரசிகர்களின் ஆதங்கம்

இந்த நிலையில் சமீபகாலமாக தைரியமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில், 'நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர் போர் போர் அப்பிடின்னு கேட்டு போர் அடிக்குது' என்று மறைமுகமாக கலாய்த்துள்ளார்.

கஸ்தூரி கூட கலாய்க்கிற நிலைமையை தலைவர் ஏற்படுத்திவிட்டாரே என்று ரஜினி ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.