வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (10:12 IST)

ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கிய கதாநாயகி நடிகை!

நடிகை ராதாவின் மகளும் கதாநாயகி நடிகையுமான கார்த்திகா இப்போது வாய்ப்புகள் இலலாததால் தாயாரின் ஹோட்டல் பிஸ்னஸில் இறங்கியுள்ளாராம்.

நடிகைகள் அம்பிகா மற்றும் ராதா ஆகியவர்கள் 1980 களில் பிரபல கதாநாயகிகளாக வலம் வந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் திருமண வாழ்க்கையில் ஈடுபட்டு சினிமாவை விட்டு விலகினர். இந்நிலையில் 2011 ஆம் ஆண்டு ராதாவின் மகளான கார்த்திகா கோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின்னர் அன்னக்கொடி மற்றும் புறம்போக்கு ஆகிய படங்களில் நடித்தாலும் அவருக்கென்று பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் இப்போது அவரின் அம்மா ராதாவின் ஹோட்டல்களை கவனித்துக்கொண்டு வருகிறாராம்.