1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (18:15 IST)

நிறத்தை மாற்றுவதற்காக சரும அறுவை சிகிச்சையா? பிரபல நடிகை விளக்கம்..!

kajol
பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனது நிறத்தை மாற்றுவதற்காக சரும அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் இது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். 
 
அரவிந்த்சாமி பிரபுதேவா நடித்த மின்சார கனவு, தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை கஜோல். 
 
இந்த நிலையில் நடிகை கஜோல் ஆரம்பத்தில் கருப்பாக இருந்ததாகவும் சரும அறுவை சிகிச்சை செய்து கலராக மாறிவிட்டதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளியானது. 
 
இது குறித்து அவர் விளக்கம் அளித்தபோது வெள்ளையாக மாறுவதற்கு நான் எந்தவித அறுவை சிகிச்சையும் செய்யவில்லை என்றும் வெயிலில் அதிகமாக சுற்றாமல் ஜாக்கிரதையாக இருக்கிறேன், அதுவே என்னுடைய கலருக்கு காரணம் என்றும் தெரிவித்தார்.
 
நான் கலராக மாற்றுவதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் என்பது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் எந்த அறுவை சிகிச்சையும் நான் செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva