1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (07:46 IST)

ராஜேஷ் இயக்கத்தில் ஹன்சிகா நடிக்கும் புதிய வெப் சீரிஸ்!

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய ஹிட் படங்களின் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இயக்குனர் எம் ராஜேஷ். ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் பார்முலா படங்கள் ரசிகர்களுக்கு போரடிக்க ஆரம்பித்ததால் வரவேற்புப் பெறவில்லை. ஆனாலும் ராஜேஷ் இன்னும் பார்முலாவை மாற்றவில்லை. இந்நிலையில் இப்போது அவர் நடிகை ஹன்சிகா நடிக்கும் மை 3 என்ற வெப் தொடரை இயக்கி வருகிறார்.

வழக்கமாக காமெடி படங்களையே தனது கதைக்களமாக எடுத்துக்கொள்ளும் எம் ராஜேஷ், இந்த முறை முதல் முறையாக ஹாரர் களத்தில் புகுந்துள்ளாராம். இந்த தொடரின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ள நிலையில் தற்போது இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் பிக்பாஸ் இல்லத்தில் வெளியாகியுள்ளது. இந்த தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடரின் போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு விரைவில் இந்த சீரிஸ் டிஸ்னி தளத்தில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இந்த தொடரில் ஹன்சிகாவோடு சாந்தணு உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.