ஒல்லியான தோற்றத்துக்கு மாறிய ஹன்சிகா… கலக்கல் போட்டோஷூட்!
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. குஷ்பு போல பூசினார் போல இருந்த அவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் திருமணம் செய்துகொண்டார்.
அடுத்தடுத்து இந்த ஆண்டு அவர் நடிப்பில் சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. இதையடுத்து திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இப்போது காந்தாரி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த MY3வெப் தொடரின் ரிலீஸாகி அட்டர் ப்ளாப் ஆனது.. இந்நிலையில் இப்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.