செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (17:35 IST)

தற்கொலை எண்ணத்தில் இருந்து மீள ராகுல் காந்தி உதவினார்… பிரபல நடிகை நெகிழ்ச்சி!

நடிகை திவ்யா தமிழ் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமடந்தவர். இவரது குடும்பம் காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு காங்கிரஸின் இளைஞர் பிரிவில் சேர்ந்து 2013-ல் நடந்த மாண்டியா தொகுதி இடைதேர்தலில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றார். பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து இந்திய அளவில் பிரபலம் ஆனார்.

இந்நிலையில் இப்போது தனக்கு ஏற்பட்ட தற்கொலை எண்ணங்கள் குறித்தும் அதில் இருந்து மீண்டு வந்தது குறித்தும் பேசியுள்ளார். அதில் “என் தந்தை இறந்த போது எனக்கு தற்கொலை எண்ணங்கள் கூட வந்தன. அப்போது எனக்கு ஆதரவாக ராகுல் காந்தி இருந்தார். என் வாழ்க்கையில் என் அப்பா அம்மாவுக்கு அடுத்து முக்கியாமனவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர்” எனக் கூறியுள்ளார்.