புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 14 மார்ச் 2022 (08:46 IST)

”பிரபலமா இருந்துட்டு இது தேவையா..?” – புத்தகவிழாவில் திருடிய நடிகை!

கொல்கத்தா புத்தக திருவிழாவில் திருடிய சீரியல் நடிகையை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்க மொழி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை ரூபா தத்தா. நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவிற்கு சென்ற அவர், அங்குள்ள குப்பைத் தொட்டியில் பர்ஸ் ஒன்றை போட்டுள்ளார்.

அதை கண்ட போலீஸார் அவரை சோதித்ததில் அவரிடமிருந்து பையில் ஏகப்பட்ட பர்ஸ்களும் பணமும் இருந்தது தெரிய வந்துள்ளது. புத்தக திருவிழா வந்தவர்களிடம் போலி பர்ஸ் ஒன்றை கீழே போட்டு அவர்களது பர்ஸா எனக்கேட்டு அவர்களுடைய பர்ஸை ரூபா திருடியது தெரிய வந்துள்ளது. போலீஸார் அவரை கைது செய்துள்ள நிலையில் “பிரபலமா இருந்துகிட்டு இந்த வேலை தேவைதானா?” என்ற ரீதியில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.