வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 14 ஜூலை 2020 (09:12 IST)

லாக்டவுன் முடிஞ்சதும் இப்படித்தான் ஆடுவேன் - ஆசையை தேக்கி வைத்திருக்கும் அஞ்சலி

தமிழ் சினிமாவின் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகை அஞ்சலியின் திரைப்பயணத்தில் கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்கள் மைல் கல்லாக அமைந்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இதற்க்கிடையில் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய் காதலித்து இருவரும் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசு கிசுக்கள் எழுந்தது. பின்னர் சில காலம் படங்களில் நடக்காமல் இருந்து வந்த அஞ்சலி மீண்டும்  பேரன்பு, லிசா ,நாடோடிகள் 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்ப்போது கொரோனா ஊரடங்கில் பட வேலை ஏதுமில்லாததால் வீட்டில் ஓய்வெடுத்து வரும் அஞ்சலி சமூக வலைத்தளத்தில் முழு நேரத்தையும் செலவிட்டு அடிக்கடி எதையேனும் பதிவிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது நடுரோட்டில் ஜாலியாக நடனமாடிய பழைய போட்டோ ஒன்றை வெளியிட்டு " கொரோனா லாக்டவுன் முடிஞ்சதும் இப்படித்தான் ஆடுவேன்" என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார்.