1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (18:40 IST)

காங்கிரஸில் கால் பதிக்கும் அஞ்சலி?

நடிகை அஞ்சலி, அரசியல் கட்சியில் சேரப் போவதாகத் தகவல் கிடைத்துள்ளது.



 
தமிழ் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது. கடந்த காலங்களில் அரசியலில் வெற்றிக்கொடி நாட்டியவர்களில், சினிமாக்காரர்களும் இருந்தனர். இப்போது நடிகைகளுக்கும் அரசியல் ஆர்வம் வந்துள்ளது. விஜயசாந்தி, நக்மா, குஷ்பூ, ரோஜா என முன்னாள் நடிகைகள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களைப் போல அரசியலில் வளர அஞ்சலிக்கும் ஆசையாக இருக்கிறதாம். காங்கிரஸ் கட்சி அவருக்கு தூது விட்டிருப்பதாகத் தகவல். சமீபத்தில் நாடாளுமன்றத்திற்கு சென்று சுற்றிப் பார்த்து வந்துள்ளார் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.