1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 அக்டோபர் 2021 (11:05 IST)

நடிகை அனிகாவின் பியுட்டிபுல் போட்டோஸ்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா இப்போது கதாநாயகி வேடங்களுக்கு முயற்சி செய்து வருகிறார்.

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 

இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. அதையடுத்து அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த படங்களை எல்லாம் சமூகவலைதளங்களில் பதிவேற்றி வருகிறார். அவையும் வைரலாகப் பரவி சீக்கிரமே அனிகா கதாநாயகியாக மாறிவிடுவார் என அனைவரையும் சொல்ல வைத்துள்ளன.

இதையடுத்து இப்போது வெள்ளை உடையில் தேவதை போல இருக்கும் புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவை இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.