1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Muurgan
Last Modified: வியாழன், 1 செப்டம்பர் 2016 (12:07 IST)

மலர் டீச்சர் விவகாரம் ; ப்ளீஸ் என்னை ஓட்டாதீங்க : டிவிட்டரில் கெஞ்சிய ஸ்ருதிஹாசன்

ப்ளீஸ் என்னை ஓட்டாதீங்க : கெஞ்சும் ஸ்ருதிஹாசன்

மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்னை தயவு செய்து கிண்டல் செய்யாதீர்கள் என்று நடிகை ஸ்ருதிஹாசன் டிவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



நடிகர் நிவின்பாலிக் கதாநாயகனாக நடித்து மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பிரேமம். அதில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து ரசிகர்களின் மனதை அள்ளினார். அதன் தெலுங்கு பதிப்பில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். அந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியிருக்கிறது.  

ஆனால், ஸ்ருதியின் முகபாவனை மற்றும் நடிப்பு சாய் பல்லவி போல் இல்லை என்று கூறி பலரும் ஸ்ருதியை கிண்டல் அடித்து வருகின்றனர். ஏராளமான மீம்ஸ் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் உலவ விட்டனர்.

ஸ்ருதியை பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் வடிவேலுவுடன் எல்லாம் ஒப்பிட்டு மீம்ஸ் உருவாக்கி அவரை ஒருவழிபண்ணிவிட்டனர்.

இதையெல்லாம் கண்டு அதிர்ச்சியடைந்த ஸ்ருதிஹாசன் “தயவுசெய்து என்னை மலர் டீச்சரோடு ஒப்பிடாதீர்கள். பிரேமம் படத்தின் ஒரிஜினலை மறந்துவிட்டு என் நடிப்பை பார்த்து விமர்சனம் செய்யுங்கள். மக்கள் படத்தைப் பார்ப்பதற்கு முன்பே அவர்களின் மனதில் ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டாம். என்று கெஞ்சியுள்ளார்.

விட்ருங்கப்பா பாவம்....