வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (15:53 IST)

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட்டனர்!

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் 'முன்தினம்'இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட பவர் ஸ்டார் அதை பெற்றுக்கொண்டார்.
 
இப்படத்தை விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் லோகநாதன் என்பவர் எல். வி. கிரேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார். 
 
இந்த படத்தில் இயக்குனர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ் மற்றும் ராம்  ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அது மட்டுமின்றி இப்படத்தில் யுவராஜ், ஷமிதா,சாவித்ரி, நெல்லை பெருமாள், சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு உட்பட  மற்றும் பலர் நடித்துள்ளனர்.
 
இப்படத்திற்கு ஜீவாவர்ஷினி இசை அமைத்துள்ளார். 
 
2S என்டேர்டைன் மெண்ட் சார்பில்  எஸ்.வினோத் குமார் அவர்கள் வெளியிடவுள்ளார்.