வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: புதன், 4 நவம்பர் 2015 (13:29 IST)

பல வருடங்களுக்கு பிறகு இணையும் கமலஹாசன் -அமலா

நடிகர் கமலஹாசனும், நடிகை அமலாவும் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்கள்.


 


 
நடிகை அமலா டி.ராஜேந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். அதன் பின் பல திரைப்படங்களில் நடித்த அவர் கமலஹாசனுடன் பேசும்படம், வெற்றி விழா, சத்யா ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அதன்பின் தெழுங்கு நடிகர் நாகார்ஜூனாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி விட்டார்.
 
அதன் பின் அவர் எந்த திரைப்படங்களிலும் நடிக்க வில்லை. அவரது மகனே இப்போது தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். 
 
இந்நிலையில், கமலாஹாசனின் அடுத்த படத்தில் அமலா கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதை ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய போது கமலாஹாசன் உறுதி செய்தார்.
 
இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுகிறது. இந்த படத்தை டி.கே. ராஜீவ்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே கமலை வைத்து சாணக்யன் என்ற படத்தை இயக்கியவர். 
 
மொத்தத்தில் 25 வருடங்களுக்கு பிறகு நடிகை அமலா, கமலஹாசனுடன் இணைவது சினிமா ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.