திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 14 ஜூன் 2023 (17:46 IST)

சிவகுமார் பிடியில் சூர்யா... ஜோதிகாவுக்கு தூது வேலை பார்த்தது இந்த பிரபல நடிகர் தான்!

ஒன்றாக நடித்தபோது காதல் வயப்பட்ட சூர்யா – ஜோதிகா இருவரும், இருவீட்டாரின் சம்மதத்தின்படி கடந்த 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு, இன்று 11வது ஆண்டு திருமண நாள். தியா, தேவ் என இரண்டு அழகான குழந்தைக்குப் பெற்றோராகினர்.

திருமணத்திற்கு பின்னர் இருவரும் தொடர்ந்து நடித்து வருகிறார்கள். இதனிடையே அவர்கள் மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டனர். இந்நிலையில் சூர்யா - ஜோதிகா இருவரும் காதலித்து வந்த போது அவர்களுக்கு நடிகர் ரமேஷ் காண தான் தூது வேலை பார்த்துள்ளார். இருவரும் வெவ்வேறு ஷூட்டிங்கில் இருந்தபோது ரமேஷ் கண்ணா தான் நலன் விசாரித்து இருவருக்கும் தூது நபராக இருந்தாராம்.