வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (09:34 IST)

எங்க குடும்பத்தை ட்ரோல் செய்தால் 10 கோடி நஷ்ட ஈடு வழக்குப் போடுவோம்… நடிகர் எச்சரிக்கை!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு தங்கள் குடும்பத்தைப் பற்றி பரப்பப்படும் மீம்ஸ்களைப் பற்றி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு குடும்பமாக மோகன்பாபுவின் குடும்பம் இருக்கிறது. அவரின் மகன் விஷ்ணு மஞ்சு சமீபத்தில் தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் விஷ்ணு மஞ்சுவின் தந்தை மோகன்பாபு நடித்த சன் ஆஃப் இந்தியா என்ற திரைப்படம் வெளியாகி தோல்வியடைந்தது. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பல மீம்ஸ்கள் வெளியாகி ட்ரோல் ஆகியது. இந்த மீம்ஸ்கள் அந்த படத்தைப் பற்றி மட்டும் இல்லாமல் மோகன் பாபுவின் குடும்பத்தினரைக் கூட விமர்சிக்கும் விதமாக இருந்தது.

இதனால் அதிருப்தியடைந்த விஷ்ணு மஞ்சு ‘இனிமேல் அநாகரிகமாக இதுபோல மீம்ஸ்களை யாராவது பகிர்ந்தால் அவர்கள் மீது 10 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடுப்போம். இந்த மீம்ஸ்களுக்கு பின் இரு முன்னணி நடிகர்கள்தான் இருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.