விக்ரமின் தம்பியை பார்த்திருக்கிறீர்களா? அவரும் நடிகராம்! வைரல் புகைப்படம் இதோ!

Last Updated: செவ்வாய், 30 ஜூலை 2019 (19:07 IST)
தமிழ் சினிமாவில் பல தடைகளை தாண்டி தன திறமையாலும் கடின உழைப்பாலும் முன்னுக்கு வந்த நடிகர்களில் முக்கியமானவர் சியான் விக்ரம். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தாலும் அத்தனை தடைகளையும் தாண்டி தற்போது உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். 


 
அவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த கடாரம் கொண்டான் படம் கலவையான விமர்சனங்ககளை பெற்றாலும் விக்ரமின் ஸ்டயிலான தோற்றத்தையும் அவரது நடிப்பையும் பலரும் பாராட்டினார். 


 
இந்நிலையில் தற்போது யாரும் இதுவரை பார்த்திராத விக்ரமின் தம்பி அரவிந்த் ஜான் விக்டரின் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. இவர் தற்போது நடிகராக களமிறங்கியுள்ளாராம்.  "எப்போ கல்யாணம்" அறிமுகமாகவுள்ள அவர் முதல் படத்திலியே அதிரடி வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தவிருக்கிறார்.  தற்போது இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :