1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2023 (07:37 IST)

விஜயகாந்த் தம்பியா நான் அறிமுகம் ஆகணும்தான் அந்த படம் எடுத்தோம்… வைரல் ஆகும் நடிகர் விஜய்யின் பழைய வீடியோ!

தமிழ் சினிமாவில் இன்று சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் ஆரம்ப காலகட்டத்தில் முதல் வெற்றியைக் கொடுக்க தடுமாறிக் கொண்டிருந்த போது விஜயகாந்துடன் செந்தூரப்பாண்டி படத்தில் அவரின் தம்பியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கி தயாரித்திருந்தார். இந்த படம் வெற்றி பெறவே விஜய்க்கு நல்ல அறிமுகம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே கிடைத்தது. இந்நிலையில் இந்த படம் பற்றியும் விஜயகாந்த் பற்றியும் விஜய் பேசியுள்ள வீடியோ ஒன்று இப்போது வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில் “கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ்னு ரெண்டு பேரு இருக்காங்க. அதுல மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்களே அவங்க ஒரு நடிகன நடிகனா ஏத்துக்கணும்.  அது ரொம்ப முக்கியம். அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஒரு பெரிய ஹீரோ அண்ணன் விஜயகாந்த் சார். அவங்கள வச்சு எங்கப்பா ஒரு படம் எடுத்தாங்க. அதுல அவங்க தம்பியா நடிக்க வச்சாங்க. விஜயகாந்த் சார பார்க்க வர ஆடியன்ஸ், அவங்களுக்கு அவரோட தம்பியா நான் அறிமுகமாகிறேன். இதுக்காகதான் அந்த படம் எடுக்கப்பட்டது. அந்த படம் வெற்றியும் பெற்றது” எனக் கூறியுள்ளார் விஜய்.