புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 28 ஜூலை 2021 (18:14 IST)

நடிகர் விஜய்யின் அதிரடி முடிவு...

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பு  அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரண நிதியாக அளிக்க விருப்பமில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  நடிகர் விஜய். இவர்,  கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் காரை இங்கிலாந்திலிருந்து வாங்கினார். இந்த காருக்கு இறக்குமதி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் வரியில் தளர்வு அளிக்க கோரி நடிகர் விஜய் அப்போது மனு அளித்திருந்தார்.

மனு அளித்து 9 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனு மீதான விசாரணையில் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமாக விதித்தது. இந்த அபராதத்தை முதல்வர் கோவிட் பொது நிவாரண நிதியில் இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தற்போது சில நிபந்தனை விதித்துள்ள விஜய் தரப்பு, என் காருக்கு வரி கட்ட தயார். ஆனால், தனி நீதிபதி கருத்துகளை நீக்க வேண்டும். அவர் விதித்த அபராத தொகை 1 லட்சத்தையும் நீக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதிபதி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார். அதன் மூலம் என்னை தேச விரோதி போல சித்தரித்து உள்ளார் என நடிகர் விஜய் தரப்பு மேல்முறையீட்டுசெய்தது. நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கு இன்று தனிநீதிபதி  அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது, நடிகர் விஜய்  ரூ. 1 லட்சம் அபராரத்தை ஏன் நிவாரணநிதியாக வழங்கக் கூடாது எனக் கேள்வி எழுப்பினார்.  இதற்கு நடிகர் விஜய் தரப்பு, ஏற்கனவே முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கியுள்ளதால், அபராதமாக விதிக்கப்படும் ரூ.1 லட்சத்தை நிவாரணநிதியாக வழங்க விருப்பமில்லை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.