'விஜய்65 'படப்பிடிப்பு..?? நடிகர் விஜய் ஒருமாதம் வெளிநாடு செல்கிறார்...
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் விஜய்65. இப்படத்திற்காக நடிகர் விஜய் வெளிநாடு போகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படம் விஜய் 64. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகிறது.இப்படத்திற்கு சண்டை இயக்குநர்களாக அன்பறிவ் இருவரும் பணியாற்றவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார். இநிலையில் இப்படப்பிடிப்பு ஒரு மாதம் ரஷ்யாவில் நடக்கவுள்ளதால் நடிகர் விஜய் ரஷ்யா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.