’என்னடி முனியம்மா’ பாடல் புகழ் நடிகர் மரணம்!
பழம்பெரும் நாடக மற்றும் சினிமா நடிகர் டி கே எஸ் நடராஜன் ஒன்று காலமாகியுள்ளார்.
நாட்டுப்புற பாடகர், நாடக நடிகர் மற்றும் திரைப்பட நடிகர் என பல்துறை வல்லுனராக திகழ்ந்தவர் டி கே எஸ் நடராஜன். இவரை பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக்கியது இவர் பாடிய என்னடி முனியம்மா பாடலும், கவுண்டமணியுடன் நடித்த ஒரு நகைச்சுவை காட்சியும். பல தனிப்பாடல் கேசட்களை வெளியிட்டு இருக்கும் கடைசியாக அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தில் அவரின் என்னடி முனியம்மா பாடல் ரீமிக்ஸில் நடித்திருந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் இன்று அவர் தன்னுடைய 87 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.