1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (10:45 IST)

மனைவிக்காக மதம் மாறினாரா சூர்யா? அதிர்ச்சியில் சிவகுமார்!! (வீடியோ)

நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.


 
 
நடிகை ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இதற்கு சாட்சியாக ஒரு வீடியோவில் சூர்யா இஸ்லாமிய முறைப்படி தர்காவில் தொழுவது போன்ற வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
 
ஆனால், சூர்யா இதை மறுத்துள்ளார். மேலும், சிங்கம் 3 படப்பிடிப்பின் போது ஆந்திராவில் கடப்பா பகுதிக்கு சென்ற போது  ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்ததால் அவருடன் அந்த தொழுகையில் கலந்துகொண்டாதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 
 
இந்த நிகழ்வு திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.