செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 23 ஜூலை 2020 (15:25 IST)

பிறந்த நாளில் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நடிகர் சூர்யா

தமிழ் திரைப்பட உலகில் அதிகமான ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவராக விளங்குபவர் சூர்யா. நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாலம் அகரம் பவுண்டேசன் மூலமாக மாணவர்கள் கல்விக்கு உதவுவது, சமூக சேவைகளில் பங்கெடுப்பது என சூர்யா செய்துவரும் சேவைகளால் பலருக்கு அவர் மீது மதிப்பும், மரியாதையும் உள்ளது.

இன்று (ஜூலை 23) நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.  அவரது பிறந்த நாளை முன்னிட்டு  ’வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் சூரைப் போற்று படத்தின் "காட்டு பயலே" பாடல் ப்ரோமோ என அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

இந்த நிலையில் கடந்த இரு திங்களுக்கு முன்னர் சூர்யா இன்ஸ்டாகிராமில் இணைந்தார். ஜோதிகாவுடன் எடுத்துக்கொண்ட செலஃபி புகைப்படமொன்றை முதன் முதலாக வெளியிட்டிருந்தார். அதையடுத்து பிறந்த நாளான இன்று செம ஹேண்ட்ஸம் போட்டோ ஒன்றை வெளியிட்டு "அனைவரையும் இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சி. அன்பையும் நேர்மறை எண்ணங்களையும் பரப்புவோம்" என கேப்ஷன் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

அதே நேரத்தில் நடிகர் சூர்யா  இன்ஸ்டாவில் தம்பி கார்த்தி, சகோதரி பிருந்தா, 2டி நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர் ராஜசேகர பாண்டியன் என நான்கு பேரை மட்டும் ஃபாலோவ் செய்துள்ளார். தற்ப்போது வரை அவரது கணக்கை 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Happy to be here and meet you all. Let's spread love and positivity!! #Staysafe #LoveUall

A post shared by Suriya Sivakumar (@actorsuriya) on