1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 16 டிசம்பர் 2023 (16:48 IST)

உலக திரைப்பட விழாக்களில் நடிகர் சூரியின் 3 படங்கள்! – ஹேப்பி மோடில் சூரி!

உலக திரைப்பட விழாக்களில் நடிகர் சூரி நடித்த 3 திரைப்படங்கள் திரையிடப்படுவதால் மகிழ்ச்சியில் உள்ளாராம் சூரி.



தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிக்குழு மூலமாக காமெடி நடிகராக அறிமுகமானவர் சூரி. அவரது பரோட்டா காமெடிக்காகவே பரோட்டா சூரி என பிரபலமாக அறியப்பட்டவர் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். சூரிக்கு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் தமிழ் சினிமாவில் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

தற்போது உள்ளூர் சினிமா தாண்டி உலக சினிமாவிற்கு பயணிக்க தொடங்கியுள்ளார் சூரி. கூழாங்கல் இயக்குனர் வினோத் இயக்கிய கொட்டுக்காளி படத்தில் சூரி நடித்துள்ளார். இந்த படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது.

மற்றொரு பிரபலமான ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் ராம் இயக்கத்தில் சூரி நடித்துள்ள ஏழு மலை ஏழு கடல் திரைப்படம் திரையிடப்படுகிறது. அதே திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கி சூரி நடித்த விடுதலை படமும் திரையிடப்படுகிறதாம்.

இப்படியாக ஒரே சமயத்தில் உலக திரைப்பட விழாக்களில் ஒரு நடிகரின் 3 வெவ்வேறு திரைப்படங்கள் திரையிடப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதனால் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளாராம் நடிகர் சூரி.

Edit by Prasanth.K