கலைமாமணி ஸ்ரீகாந்த்: விமலுக்கு கிடையாதா? – கலாய்த்து தள்ளிய நெட்டிசன்ஸ்

kalaimamani
Last Modified புதன், 14 ஆகஸ்ட் 2019 (14:22 IST)
நேற்று நடைபெற்ற கலைமாமணி விருது வழங்கும் விழாவில் நடிகர் ஸ்ரீகாந்திற்கு விருது வழங்கப்பட்டது. அவருக்கு எதற்காக விருது வழங்கப்பட்டது என நெட்டிசன்கள் குழம்பி போயுள்ளனர். மேலும் பலர் அவர்களது விருப்ப நடிகர்களுக்கு விருது கொடுக்காததை கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ள ஒருவர் ”கௌதம் கார்த்திக்கிற்கு முத்துராமலிங்கம் படத்துக்கு தர வேண்டும்” என சொல்லியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் நடித்து சில வருடங்கள் முன்பு வெளியான “சௌகார்பேட்டை” என்ற படத்துக்குதான் விருது கொடுத்திருப்பார்கள் போல என சிலர் கருத்து கூறி வருகிறார்கள்.

twitter

மற்றொருவர் “விமல், சாம் ஆண்டர்சனுக்கு ஏன் தரவில்லை?” என கேட்டிருக்கிறார். இன்னொருவர் விருதுகள் கொடுக்கும்போது அருகில் சிரித்தபடி நின்றிருக்கும் அமைச்சர் ஜெயக்குமாரை குறிப்பிட்டு, “ஜெயக்குமாரின் ரியாக்‌ஷன் இப்படித்தான் இருக்கும் ‘எதுக்கு குடுக்குறோம்னு நமக்கும் தெரியலை, ஏன் வாங்குறோம்னு அவங்களுக்கும் தெரியலை” என்று பதிவிட்டுள்ளார்.

இதுதவிர நிறைய மீம்களும் இணையத்தில் உலா வருகின்றன.இதில் மேலும் படிக்கவும் :