ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 பிப்ரவரி 2024 (08:10 IST)

வாடிவாசல் படத்தில் சூரிக்கு முக்கியக் கதாபாத்திரம்?.. வெற்றிமாறன் போடும் திட்டம்!

நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது.

இதையடுத்து சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஜி வி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் வைத்தி என்ற ஒரு துணைக் கதாபாத்திரத்தில் சூரியை நடிக்க வைக்கலாம் என வெற்றிமாறன் ஆசைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஆண்ட்ரியாவை ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க வெற்றிமாறன் ஆசைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.