வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (07:23 IST)

கங்குவா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா திரைப்படம். சூர்யாவின் 42 ஆவது படமான கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார்.  இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி வியாழக் கிழமை  ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் கங்குவா படத்தின் வி எஃப் எக்ஸ் பணிகள் முடிய நேரமாகும் என்பதால் இப்போது ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் தற்போது வி எஃப் எக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.