செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (12:16 IST)

கொரோனா நிவாரண நிதியை உதயநிதியிடம் கொடுத்த சூரி!

கொரோனா நிவாரண நிதியை உதயநிதியிடம் கொடுத்த சூரி!
கொரோனா வைரஸ்க்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை ஆதரவளிக்கும் வகையில் தமிழ் திரையுலகினர் பலர் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவும், நடிகருமான உதயநிதியை சந்தித்த நடிகர் சூரி கொரோனா நிவாரண நிதி வழங்கி உள்ளார் 
 
நடிகர் சூரி தனது சார்பில் ரூபாய் 10 லட்சம் காசோலையும் தனது மகன் மற்றும் மகள் சார்பில் ரூபாய் 25 ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக உதயநிதியிடம் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது
 
நடிகர் சூரியின் மகள் வெண்ணிலா மற்றும் மகன் சர்வான் ஆகிய இருவரும் சேர்த்து வைத்திருந்த ரூபாய் 25 ஆயிரத்தை ரொக்கமாக முதல்வர் நிவாரண பணிக்காக அளித்துள்ளதை அடுத்து அவரது குழந்தைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.