தனுஷை அப்பட்டமாக காப்பியடித்த ஷாருக்கான் - வைரல் வீடியோ
ஜீரோ (Zero) படத்தில் நடிகர் ஷாருக் கான் மிகவும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். அவர் உயரம் அதிகமில்லாதவராக நடிக்க அவருக்கு ஜோடியாக கத்ரீனா கைப் மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஜீரோ படத்தின் புதிய ப்ரோமோ டீஸர் ஒன்று நேற்று வெளிவந்தது. அதில் அவர் பேசும் ஒரு வசனம் ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் அந்த வசனத்தை படிக்காதவன் படத்தில் தனுஷ் பேசியுள்ளார். அதை அப்படியே எடுத்து ஹிந்தி மொழியில் பயன்படுத்தியுள்ளனர்.
"Hum jaise londo se dekhke pyar nahi hota bahen ji dekhte dekhte ho jaata hai" என வரும் வசனத்தின் அர்த்தம் "என்ன மாதிரி பசங்களை பாத்தா புடிக்காது, பாக்க பாக்க தான் புடிக்கும்" என தனுஷ் படிக்காதவன் படத்தில் பேசிய வசனம் தான்.
அதுமட்டுமல்லாது ஜீரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனுஷின் ராஞ்சனா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.