எனக்கு சாதாக் கணக்கே தெரியாது…. இதுல டிவிட்டர் கணக்கா? நடிகர் செந்தில் புகார்!

Last Modified செவ்வாய், 15 ஜூன் 2021 (09:10 IST)

நடிகர் செந்தில் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டதை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் செந்தில் தமிழ் சினிமால் 40 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதிமுக ஆதரவாளராகவும், பேச்சாளராகவும் பல தேர்தல்களில் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் பெயரில் ஒரு போலிக் கணக்கு தொடங்க பட்டு அதில் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்யும் விதமாக கருத்துகள் பதியப்பட்டன. இதை அறிந்த செந்தில் சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் அது சம்மந்தமாக புகாரளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘எனக்கு சாதாக் கணக்கே தெரியாது… இதுல டிவிட்டர் கணக்கு எப்படி தெரியும்?’ என நகைச்சுவையாக பேசினார்.இதில் மேலும் படிக்கவும் :