1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 23 மே 2017 (18:16 IST)

சிபி செய்த காரியத்தால் சத்யராஜ் ஃபேஸ்புக் கணக்கு முடக்கம்

நடிகர் சத்யராஜ் பெயரில் இருந்த போலி ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்த மகன் சிபி, தனது நண்பர்களின் உதவியோடு புகார் தெரிவித்து அந்த கணக்கை முடக்கினார்.


 

 
நடிகர் சத்யராஜ் சமூக வலைதளமான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற எதிலும் இல்லை. பாகுபலி 2 படம் பார்த்துவிட்டு சத்யராஜ் ரசிகர்கள் அனைவரும் சிபியின் ட்விட்டர் கணக்கில்தான் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் சத்யராஜ் பெயரில் போலி பக்கம் ஒன்று இருந்துள்ளது. அதில் சர்ச்சைக்கு உரிய கருத்துகள் பதிவிட பட்டு இருந்துள்ளது. இதைப்பார்த்த சிபி தனது, அப்பா பெயரில் போலி பக்கம் உள்ளது. இதுகுறித்து புகார் தெரிவிக்குமாறு தனது நண்பர்களை கேட்டுக்கொண்டார்.
 
அதன்படி புகார்கள் தெரிவிக்கப்பட்டு அந்த போலி கணக்கு ஃபேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.