செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 10 நவம்பர் 2022 (15:29 IST)

பூமர் அங்கிள் சதீஷ்… இணையத்தில் பரவும் ட்ரோல்கள்… ஓ இதுதான் காரணமா?

சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்தது.

போர்னோ படங்களில் நடித்து புகழ்பெற்ற சன்னி லியோன் அந்த துறையில் இருந்து விலகி இந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் பாலிவுட் படங்களில் பாடல்களுக்கு நடனமாடி வந்த அவர்,  இப்போது தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இவர் நடிப்பில் தமிழில் உருவான வீரமாதேவி திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இப்போது நகைச்சுவை நடிகர் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் நகைச்சுவை திரில்லர் படமான ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் டிக்டாக் பிரபலம் ஜி பி முத்துவும் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்த நிலையில் அதில் கலந்துகொண்ட சன்னி லியோன் புடவை கட்டி வந்திருந்தார். படத்தின் கதாநாயகி மாடர்ன் உடையில் வந்திருந்த நிலையில் நடிகர் சதீஷ் இருவரையும் ஒப்பிட்டு பேசினார். அதில் “வெளிநாட்டில் பிறந்த சன்னி லியோன், நம் கலாச்சாரப்படி புடவை கட்டி வந்துள்ளார். ஆனால் நம்ம ஊர்ல பிறந்த பெண் எப்படி வந்திருக்கார் பாருங்க” எனப் பேசி இருந்தார். அவரின் பிற்போக்குத் தனமான இந்த பேச்சு இணையத்தில் இப்போது ட்ரோல் ஆகி வருகிறது.